ஒரு இலட்சம் பனை மரங்கள் உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பாண்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு பின்புறமுள்ள வீதிகளில் பனை மரம் வளர்ப்பு திட்டத்தின் ஊடாக பனை விதை நடப்பட்டது.
இந்நிகழ்வானது இன்று(6) அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இணைப்பாளர் புஷ்பராஜ் துஷானந்தன் தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம விருந்தினராக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஜெ.அதிசயரஜ் மற்றும் பனை அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் த. விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து கல்முனை பாண்டிருப்பு மகா வித்தியாலய அதிபர் மற்றும் மாணவர்களினால் பாடசாலை சூழலை சுற்றியுள்ள பகுதிகளில் பனை விதை விதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment