புளியாவத்தையில் கேஸ் கசிவு மற்றும் வெடிப்பு



நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
புளியாவத்த ஹொன்சி கிழ்ப்பிரிவு தோட்ட பகுதியில் இரண்டு வௌ;வேறு குடியிருப்புகளில் எரிவாயு கசிவு மற்றும் வெடிப்புச் சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மேற்படி பிரதேசத்தில் ஞாயிற்;றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறானதொரு சம்பவம் தொடர்பில் குறித்த குடியிருப்பாளர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
 
இதேவேளை குறித்த இரண்டு ஏரிவாயு சிலிண்டரர்களும் 15 நாட்களுக்கு முன்பு கொள்வணவு செய்துள்ளதாகவும் நேற்று இரவு குறித்த சிலின்டர்களை பாவனைக்கு எடுத்த போது இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. எனினும் சம்பவத்தின் போது உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கும் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :