சம்மாந்துறையில் 'புனல் தாயின் பயணம்' நூல் வெளியீட்டு விழா



வி.ரி.சகாதேவராஜா-
மிழா ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் கவிஞர் அலியார் முகம்மது முஸ்தபா எழுதிய 'புனல் தாயின் பயணம்' நூல் வெளியீட்டு விழா சம்மாந்துறை அல் மர்ஜான் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலை காரியப்பர் மண்டபத்தில் கலந்தர் லெவ்வை வாத்தியார் நினைவு அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது .

நிகழ்வுக்கு சந்தக் கவி மு.இ.அச்சி முகம்மது தலைமை தாங்கினார். பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து அல்ஹாஜ் எஸ் எல். எம் .ஹனிபா கலந்துகொண்டதோடு கௌரவ அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக முதன்மைப பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் கலந்து சிறப்பித்தார்.

பிரதி மீதான நுண் பார்வை உரையை கவிஞர் விஜிலி மூஸா நிகழ்த்தினார்.
ஏற்பாட்டு உரையை தமிழா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் செ.மு ஜெலீஸ் ஆற்றினார்.

கடல் கடந்த வாழ்த்துரையை பன்முக ஆளுமை வித்யாசாகர் காணொளி வடிவில் நிகழ்த்தினார். பிரதி மீதான இரு கவிதை எனும் தொனிப்பொருளில் இளம் விமர்சகர் ஏ ஜி எம் .இக்றாம் நிகழ்த்தியதோடு வரவேற்புரையினை மஹம்மட் நிஜாமுதீன். நிகழ்த்தினார்.
இலக்கியஆர்வலர்கள் பலரும் கலந்துசிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :