கொவிட் கால முன்னெச்சரிக்கைகள் தொடர்பில் இலவச வழிகாட்டல் நிகழ்வு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் இந்திய மணிப்பால் வைத்தியசாலை ஆகியன இணைந்து நடாத்தும் 'கொவிட் கால முன்னெச்சரிக்கைகள்' எனும் தொனிப்பொருளிலான இலவச வழிகாட்டல் நிகழ்ச்சி எதிர்வரும் 05ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை)
பிற்பகல் 07.00 மணிக்கு இடம்பெறவுள்ளது

துறைசார்ந்த வளவாளர்களால் நடாத்தப்படும் இந்த வழிகாட்டல் நிகழ்ச்சியில், விசேடமாக ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என எவரும்
கலந்து கொள்ள முடியும்.
ஒன்லைன் மூலமாக இடம்பெறும் இந் நிகழ்ச்சிக்கு மட்டுப்படுத்தப்பட்டவர்களே இணைத்துக் கொள்ளப்பட இருப்பதால் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் முன்கூட்டியே தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

கலந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான சமீஹா சபீர் தெரிவித்தார்.

பதிவுகளை மேற்கொள்ள: https://forms.gle/Y4HWTUELeDkSr9Q1A

மேலதிக விபரங்களை கீழே உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முகப்புத்தகத்தின் (Facebook) மூலம் அறிந்து கொள்ளலாம்.

https://www.facebook.com/217476415066431/posts/2091506817663372/?app=fbl
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :