மருதமுனை ஷம்ஸ் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல்



ஏ.எல்.எம்.ஷினாஸ்-
ருதமுனை ஷம்ஸ் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க வருடாந்த ஒன்றுகூடல் (18) பாடசாலையின் அதிபர் எம்.எம்.ஹிர்பகான் தலைமையில் மருதூர்கனி ஞாபகார்த்த ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது பாடசாலை தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன. கடந்த காலத்தில் பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக பாடசாலையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட பணிகள் தொடர்பாக பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் சுகையில் ஜமால்தீன் தெளிவுபடுத்தினார். பாடசாலை கடந்த காலங்களில் எதிர்கொண்டு வந்த சவால்களும், வெற்றி கொள்ளுவதில் பழைய மாணவர்களின் பங்களிப்பு எனும் தலைப்பில் பாடசாலையின் பழைய மாணவரும் பிரதேச செயலாளருமான ஜே லியாக்கத் அலி இங்கு சிறப்புரையாற்றினார். பாடசாலையின் முக்கிய வளமான மாணவர்கள் குறித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியும் பாடசாலையின் பழைய மாணவருமான ரி.எல்.அப்துல் மனாப் கருத்துரை வழங்கினார். கொழும்புக் கிளை சார்பாக பழைய மாணவரும் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.பி.அப்துல் வாஜித் உரையாற்றியதுடன் வெளிநாட்டு கிளை சார்பாக எம்.ஐ.எம்.பர்ஸான் உரையாற்றினார்.

பாடசாலையில் கல்வி அபிவிருத்தி மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலை திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர், பொருளாளர் உட்பட உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர். எதிர்காலத்தில் பாடசாலையின் பழைய மாணவர்களை ஒன்றிணைத்து முன்கொண்டு செல்ல வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு பலராலும் வலியுறுத்தப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :