கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் பெற்றோர்களுக்கான "கொவிட்" தொடர்பான விழிப்புணர்வுக்கருத்தரங்கொன்று நாவிதன்வெளி அன்னமலை தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
இருதொகுதிகளாக நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு பாடசாலை அதிபர் சீ.பாலசிங்கன் தலைமை வகித்தார்.
சம்மாந்துறைவலய உதவிக்கல்விப்பணிப்பாளரும் பாடசாலை மேம்பாட்டுநிகழ்ச்சித்திட்ட இணைப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா வளவாளராகக்கலந்துகொண்டு விளக்கமளித்தார்.
கருததரங்கை பாடசாலையின் சிரேஸ்டஆசிரியர் என்.கோடீஸ்வரன் நெறிப்படுத்தி தொகுத்தளிக்க உதவிஅதிபர் என்.வன்னியசிங்கம் கலந்துசிறப்பித்தார்.
ஆரம்பப்பிரிவு இடைநிலைப்பிரிவு பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment