இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று (28) திருகோணமலை செஞ்சிலுவைச் சங்க மாவட்ட காரியாலத்தில் அகரம் அமைப்பின் அனுசரனையில் இடம்பெற்றது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்க திருகோணமலை மாவட்டக் கிளையின் நிறைவேற்று அதிகாரி வ.தர்மபவன் தலையில் இடம்பெற்ற இந்த இரத்ததான நிகழ்வு காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணிவரை இடம்பெற்றது. இதில் 60 இற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பங்கேற்று தங்களின் இரத்தங்களை தானமாக வழங்கி வைத்தனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலை இரத்த வங்கியில் ஏற்பட்ட இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இடம்பெற்ற இந்த இரத்ததான நிகழ்வுக்கு இரத்த வங்கியின் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் கே.எம்.நழீம் மற்றும் தாதிய உத்தியோகத்தர் திருமதி எஸ்.தெய்வேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
0 comments :
Post a Comment