'மிஹிந்து நிவஹன' திட்டத்தின் கண்டி, மாத்தளை மற்றும் கேகாலை அகிய மாவட்டங்களின் தேசிய விழாபுத்தசாசனத்திற்கு தனது பிள்ளைகளை அர்ப்பணித்த பெற்றோர்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட 'மிஹிந்து நிவஹன' திட்டத்தின் கண்டி, மாத்தளை மற்றும் கேகாலை அகிய மாவட்டங்களின் தேசிய விழா மகா விகாரை ஷயாமோபாலி மகாநிக்காயவின் மகாநாயக்க, கண்டி ஹயகிரி (அஸ்கிரி) விஜயசுந்தராராம விகாரையின் அதிபதி மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பதுலு முதியங்கன ரஜமகா விகாரையின் பீடாதிபதியுமான அதி வண. கலாநிதி வரகாகொடதம்மசித்தி ஸ்ரீ பஞ்சானந்த தேரர் மற்றும் மகாவிகாரை ஷயாமோபாலி மகாநிக்காய மல்வத்து விகாரை பிரிவின் அனுநாயக, வரலாற்றுச் சிறப்புமிக்க வல்கம்பாய ரஜ மகா விகாராதிபதி அதி வண. திம்புல்கும்புரெ தலைமையிலும் மற்றும் நீர்பாசன, அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவம், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ, கமத் தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஆகியோரின் தலைமையிலும் நேற்று (01) நடைபெற்றது.

இங்கு வண. அத்காலே சந்தானந்ந தேரரின் பெற்றோரின் சார்பில் கண்டி, கம்பளை, ஜயமாலபுர பிரதேசங்களில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய வீட்டிற்கான அடிக்கல்லை அமைச்சர் இந்திக அனுருத் மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் நாட்டினர்.

'மிஹிந்து நிவஹன' திட்டம் கண்டி, மாத்தளை மற்றும் கேகாலை பேன்ற இடங்களில் தெரிவு செய்யப்பட்ட 165 பௌத்த துறவிகளின் பெற்றோர்களுக்கு வீடமைப்புத் திட்டத்திற்கான காசோலைகள் வழங்கும் வைபவம் இங்கு பிரதானமாக இடம் பெற்றது.

ஆதி கௌரவ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மற்றும் மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோகனைக்கேற்ப, பௌத்த விவகார அமைச்சு மற்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சும் இணைந்து 'மிஹிந்து நிவஹன வீடமைப்புத் திட்டம்' நாடு பூராகவும் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் முதலாவது கட்டத்தின் கீழ் நாடு பூராகவும் 2000 வீடுகள் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதோடு இதற்காக 120 கோடி ரூபா நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

ஷயாமோபாலி வம்சத்தின் மகாநிக்காயவின் அஸ்கிரி விகாரையின் தலைமை ஆவண அதிகாரி அதி வண. டாக்டர் மெதகம தம்மானந்த தேரர், ஷயாமோபாலி வம்சத்தின் மகாநிக்காயவின் அஸ்கிரி விகாரையின் சபை செயற்குழுவின் பிரதி ஆவண அதிகாரிமற்றும் அஸ்கிரி மகா விகாரை பிரிவெனாவின் சற்றுச் சூழல் அதிபர் வண. நாரம்பனையில் ஆனந்த நாஹிமி, மொரகஹகந்த ஸ்ரீ ஞானலோக பௌத்த நிலையத்தின் தலைவர் அமரபுர சாசன ஜோதிக பிரிவின் அதி வண. ஹிங்குல்வல ஞானலோக அனுநாயக்க, களனிப் பல்கலைக்கழகத்தின் கலாச்சார ஆய்வுப் பிரிவின் மூத்த விரிவுரையாளர் பேராசிரியர் வண. இந்துராகாரே தம்மரத்ன தேரர் உட்பட மகாசங்கத்தினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வாகன ஓழுங்குறுத்துகை, பேருந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்புக்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள் நீர்த தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிறிபால கமலத், கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள் நிர்த் தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்தன மற்றும் பிரதேச அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :