ஐக்கிய அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று (06) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இடம்பெற்றது.
ஆடை வியாபாரத்துறையில் சுமார் 30 வருட காலமாக கிழக்கிலங்கை மக்களுக்கு வழங்கி வரும் வர்த்தக சேவையினையும் பொதுமக்களின் தேவைகள் மற்றும் அனர்த்தங்களின் போது வழங்கும் பங்களிப்புக்கள் என்பவற்றிக்காக இக்கலாநிதிப் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.
ஏழ்மையை வெற்றி கொண்டு முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவத்தின் மூலமாக தனக்கான தனி அடையாளத்தினை இத்தரணியில் பதித்துக்கொண்ட எம்.எஸ்.எம்.முபாறக், மருதூருக்கும் தனது நிறுவனத்தினூடாக பெருமை சேர்த்துள்ளார்.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் தலைமைப் பதவியினை பொறுப்பேற்ற முபாறக் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளார். அத்துடன் பல மனிதாபிமான உதவிகளையும் தனது நிறுவனத்தினூடாக செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment