அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதுயுதீன் கிண்ணியாவிற்கு விஜயம், அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பு.
அகில இலங்கை மக்கள் மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹிசாத் பதிவுத்தீன் இன்றைய தினம்(24) கிண்ணியாவிற்கு விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து துக்கங்களை பகிர்ந்து கொண்டார்.
கிண்ணியா குறிஞ்சாகேணியில் பாதை விபத்துக்குள்ளாகி ஆறு பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் கிழக்கில் சோகமயமான நிகழ்வாக மாறியிருந்த நிலையிலே அகில இலங்க மக்கள் காங்கிரஸ் தலைவர் திடிர் விஜயத்தினை மேற்கொண்டு பாதிக்கட்ட மக்களிடம் தமது துக்கங்களை கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.
இதன் போது திருகோணமலை மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் மற்றும் கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment