சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட பாலர் பாடசலைகளுக்கு உதவி தொகை வழங்கி வைப்பு !



சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-

ம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாலர் பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்துவதற்காக உதவி தொகை வழங்கும் நிகழ்வு நேற்று (23) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா தலைமையில் நடைபெற்றது.
பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட 85 பாலர் பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட 9 பாலர் பாடசாலைகளுக்கு இவ் உதவி தொகை வழங்கி வைக்கப்பட்டது.
அந்த நிலையங்களிடையே அரச /தனியார் அல்லது சமய நிறுவனங்கள் நடாத்தி வருகின்ற பாலர் பாடசாலைகளின் திருத்த வேலைகளுக்கு ஆகக்கூடிய தொகையாக 600000 ரூபாவும் வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் நடாத்தி செல்கின்ற நிலையங்களுக்கு 200000 ரூபாவும் பாலர் பாடசாலைகளுக்கமைவாக வழங்கப்பட்டதுடன்இந்த தொகைக்கு மேலதிகமாக தெரிவு செய்யப்பட்ட (9) நிலையங்களுக்கும் 120000 பெறுமதியான மரத்தளபாடங்கள் அடங்கிய தொகுதியொன்று ரூ 50000/= பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் அடங்கிய பொதியொன்றும் மேலும் வழங்கி வைக்கப்பட்டது.

இன் நிகழ்வில் சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் யு.எல் அஸ்லம்
முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தகர் எம்.வை சித்தி நபிசா,
முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தகர் ஏ.ஜே.சித்தி றியான,பாலர் பாடசாலைகளின் பொறுப்பதிகரிகள் என குறிப்பிட்ட அளவனோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :