கண்டி ஹீரஸ்ஸகல சந்தியிலிருந்து கண்டி புகையிரத நிலையம் வரையான வீதியை நான்கு வழிப் பாதையாக விரிவுபடுத்தி அபிவிருத்தி செய்யும் பணியின் அங்குரார்ப்பண நிகழ்வுஊடகப் பிரிவு
நெடுஞ்சாலை அமைச்சு-

ண்டி ஹீரஸ்ஸகல சந்தியிலிருந்து கண்டி புகையிரத நிலையம் வரையான வீதியை நான்கு வழிப் பாதையாக விரிவுபடுத்தி அபிவிருத்தி செய்யும் பணியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (28-10-2021) ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமையில் இடம்பெற்றது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் 1290.5 மில்லியன் ரூபா செலவில் இந்த வீதி அபிவிருத்தி செய்யப்படுகிறது. இந்த வீதியின் நீளம் 2.1 கி.மீ களாகும்.
விழா நிறைவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் ஆளும் தரப்புடன் இணைந்து கொள்வதற்கு தயாராவதாக பரவி வரும் செய்திகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ,
நான் பெயர் விபரங்களை கூறமாட்டேன். யாரையும் காட்டிக் கொடுக்கவும் மாட்டேன். பலர் பேசி வருகிறார்கள். எனவே பயப்பட வேண்டாம், தேவைப்படும்போது நாங்கள் முக்கிய துரும்புச் சீட்டுகளை பயன்படுத்துவோம். வேறு யாரேனும் ஆசியையோ துரும்பையோ பாவிக்க முயன்றால், நாங்களும் துரும்புகளுடன் தயாராக இருக்கிறோம்.
ஆளும் கட்சியுடன் இணைவதற்காக எத்தனை பேர் கலந்துரையாடி வருகின்றனர் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ,
அந்தக் கணக்குகளை காட்ட வேண்டிய தேவையில்லை. பிரேமதாச தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காப்பாற்ற போராடுகிறார். திஸாநாயக்க தனது கட்சித் தலைமையை காப்பாற்ற முயற்சிக்கிறார். எனவே எங்களின் திட்டங்களை நாங்கள் வெளியிடப் போவதில்லை. யார் ஆட்டம் போட்டாலும் தேவைப்படும்போது நமது அரசு தேவையான துருப்புச் சீட்டை பயன்படுத்தும். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விரக்தி அடைந்துள்ளனர். அவர்கள் சபைக்கு வெளியில் என்ன பேசுகின்றனர் என்பது எங்களுக்குத் தெரியும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசாங்கத்தை தேர்தலின் மூலம் இலகுவாக தோற்கடிக்க முடியாது என்பதை அவர்கள் எங்களிடம் கூறியுள்ளனர்.

சிறு கட்சி தலைவர்கள் உங்களுடன் கலந்துரையாடி வருகிறார்களா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சிறு கட்சி தலைவர்கள் பலர் எங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் நாம் முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பில் எங்களுடன் கலந்துரையாடுகிறார்கள். உள்ளே என்ன நிலைமை இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும். பிரேமதாசவுக்கு அவ்வாறான தலைமைத்துவத்தை வழங்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே இவற்றையெல்லாம் நாம் அம்பலப்படுத்திக் கொண்டிருக்க போவதில்லை. தற்பொழுதுள்ள அரசியல் சூழல் உங்களுக்குப் புரியும். எதிர்க்கட்சி 55 இலட்சத்தில் இருந்து வீழ்ச்சி அடைந்துள்ளது தெரிகிறது. மொட்டின் வாக்குகள் அதிகரிக்குமே தவிர குறையாது. அதிகமான விடயங்களை வெளிப்படையாக சொல்ல முடியாது. தேர்தல் வந்த பிறகு பார்ப்போம்.
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதோடு எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சி எம்.பிகள் இணைய இருக்கிறார்களா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அப்படி சரியான நேரங்களை இப்போது ஊடகங்களுக்குச் சொல்ல முடியாது. உடனே அவர்கள் தமது நிகழ்ச்சி நிரல்களை மாற்றி வேறு திட்டம் தயாரிப்பர். அவற்றை தந்திரமாகத் தான் செய்வோம்.
இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, திலும் அமுனுகம, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :