ஊடகவியலாளர் பைசால் இஸ்மாயில் தொகுத்த "நோயும் தீர்வும்" நூல் வெளியீடு !நூருல் ஹுதா உமர்-
ம்பாறை மாவட்டத்தின் பிரபல ஊடகவியலாளர் பைசால் இஸ்மாயில் தொகுத்த "நோயும் தீர்வும்" நூல் வெளியீட்டு விழா சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ மஜீதின் தலைமையில் கல்முனை பரடைஸ் மண்டபத்தில் இன்று (19) நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரபல வைத்தியர்களிடமிருந்து தேசிய பத்திரிகைகளுக்காக பெறப்பட்ட செவ்விகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் இந்த "நோயும் தீர்வும்" நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்ஸார் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சின் முன்னாள் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்தியர் இ .ஸ்ரீதர், கல்முனை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு. சுகுணன், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், கல்முனை பிராந்திய ஆயுள்வேத இணைப்பாளர் டாக்டர் எம்.ஏ. நபீல், பொத்துவில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் உட்பட பலரும் விசேட அதிதியாக கலந்து கொண்டனர்.

சிலோன் மீடியா போரத்தின் பொருளாளர் ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் நூல் வெளியிட்டுரையை கல்முனை பிராந்திய ஆயுள்வேத இணைப்பாளர் டாக்டர் எம்.ஏ. நபீல் நிகழ்த்தினார். முதல் சிறப்பு பிரதிகளை என்.எஸ். கட்டிட நிர்மாண நிறுவனத்தின் பிரதானி எம்.யூ.எம். நியாஸ் மற்றும் பிரபல எழுத்தாளர் எம்.எச்.எம். இப்ராஹிம் ஆகியோர் பெற்றுக்கொண்டதுடன் இந்த நூலில் செவ்வி உள்ளடங்கியுள்ள வைத்தியர்கள், சுகாதார திணைக்கள அதிகாரிகள், கலை, இலக்கிய பிரமுகர்கள், சிலோன் மீடியா போரத்தின் செயலாளர் எம்.எஸ்.எம். முஜாஹித் அடங்கிய நிறைவேற்று சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு இந்நூலின் சிறப்பு பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :