கட்டிடங்களின் நிலையறிய சுகாதார அமைச்சின் கட்ட நிர்மான பிரிவினர் அட்டாளைச்சேனை, நிந்தவூர் பிரதேசங்களுக்கு விஜயம் !


நூருல் ஹுதா உமர்-

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர். எம். தௌபீக் சுகாதார அமைச்சுக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைய அட்டாளைச்சேனையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வைத்தியசாலை கட்டிடத்தை பூரணமாக கட்டிமுடிப்பது தொடர்பில் ஆராயும் களவிஜயம் சுகாதார அமைச்சின் கட்ட நிர்மான பிரிவின் பணிப்பாளர் ஸ்ரீரஜீபன் அடங்கிய குழுவினரின் பங்கெடுப்புடன் இடம்பெற்றது.

வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் செயலாளர் எம்.ஐ. நபீல், அபிவிருத்திக்குழுவின் ஆலோசகர் டாக்டர் கே.எல். நக்பர், யூ.எல். வாஹித், மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் முனாஸ்தீன் போன்றோர் விடுத்த வேண்டு கோளுக்கிணங்க அட்டாளைச்சேனை யில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வைத்தியசாலை கட்டிடத்தை விரைவாக பூரணப்படுத்தவது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது. இந்த களவிஜயத்தில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்எம். தௌபீக், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன், அமைச்சின் கட்ட நிர்மான பிரிவின் பணிப்பாளர் ஸ்ரீரஜீபன் அடங்கிய குழு, வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து நிந்தவூர் ஆயுர்வேத தொற்றாநோய் ஆராய்ச்சி தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சின் கட்ட நிர்மான பிரிவின் பணிப்பாளர் ஸ்ரீ ரஜீபன் அடங்கிய குழுவினர் ஆயுர்வேத தொற்றாநோய் ஆராய்ச்சி தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கே.எல். நக்பரிடம் நிர்மாணிக்கப்பட வேண்டிய வைத்தியசாலை கட்டிட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் சுவதாரணி மருந்துபொதிகளையும் பெற்றுக் கொண்டார்.

மேலும் நிந்தவூர் சுகாதாரவைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சின் கட்ட நிர்மான குழுவினர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பிரோசா நக்பரிடமும் கட்டிட நிர்மாணங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :