சம்மாந்துறையில் பொது இடங்களில் குப்பை சேகரிக்கும் ரம் கையளிப்புஎம்.எம்.ஜபீர்-
"எமது நகரை சுத்தமாக வைப்போம்" எனும் தொனிப்பொருளில் சர்வோதய நிறுவனத்தினால் சம்மாந்துறை பிரதேச சபைக்கு பொது இடங்களில் குப்பை சேகரிக்கும் 5 ரம் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.

சர்வோதய நிறுவனத்தின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் ஏ.ஏ.எஸ்.அபேரத்னவினால் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம்.சஹீல் ஆகியோரிடம் கையளித்தனர்.

இதில் சம்மாந்துறை நிழல் பிரதேச சபை தவிசாளர் ஏ.உதுமாலெவ்வை, நிழல் பிரதேச சபை செயலாளர் ஏ.ஆர்.எம்.இர்பான், சர்வோதய நிறுவனத்தின் சமூக நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் எம்.எச்.எம்.பைசல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சர்வோதய நிறுவனத்தின் சம்மாந்துறை நிழல் பிரதேச சபை உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இவ் குப்பை சேகரிக்கும் ரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :