பாலர் பாடசாலை கட்டிடம் புதிதாக புனரமைத்து மாணவர்களுக்கு கையளித்தார் உதயா எம்.பி



நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு லிந்துலை என்போல் - சென்ரேகூலஸ் தோட்டத்தில் அமைந்துள்ள வினோதயம் அறநெறி பாடசாலை கட்டிடம் புதிதாக புனரமைப்பு செய்யப்பட்டு மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் அவர்களின் தனிப்பட்ட நிதிதியில் இந்த கட்டிடம் புனரமைப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் மக்கள் தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமர் , பிரதேசசபை உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :