அனுராதபுர மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்தி திட்டங்களையும் விரைவாக நிறைவு செய்ய வேண்டும் - நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ



ஊடகப் பிரிவு
நெடுஞ்சாலை அமைச்சு-

ட மத்திய மாகாண ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு திட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்தி திட்டங்களையும் விரைவாக நிறைவு செய்ய வேண்டும். இந்த வீதிகள் எதுவும் கடந்த நல்லாட்சியில் நிர்மாணிக்கப்படவில்லை. - ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

வட மத்திய மாகாண ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு திட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்தித் திட்டங்களும் விரைவில் நிறைவு செய்யப்பட வேண்டும் என்று நெடுஞ்சாலை அமைச்சரும் ஆளும் தரப்பு பிரதம கொறடாவுமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கம் இந்த வீதிகளின் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிப்பது ஒருபுறமிருக்க எந்த வேலையும் செய்யாமல் மக்களை அப்பட்டமாக ஏமாற்றியதாகத் தெரிவித்த அமைச்சர் அமைச்சரவை அங்கீகாரத்துடன் தான் இந்த வீதி அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்ததாகவும் கூறினார்.

வட மத்திய மாகாண ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்டத்தில் 27 கிலோ மீட்டர் நீளமான தலாவ -கெக்கிராவ வீதி (B 213), 7 கிலோ மீட்டர் நீள கெக்கிராவ- கணேவல்பொல வீதி (B212) மற்றும் 45 கிலோ மீட்டர் நீள கணேவல்பொல - தச்சிஹல்மில்லேவ வீதி (B133) என்பன அபிவிருத்தி செய்யப்படுகிறது.
6745 மில்லியன் ரூபா செலவில் 82 கிலோ மீட்டர் நீளமான வீதி நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :