சுதேச வைத்தியர்களுக்கு நியமனங்களை வழங்குங்கள்,நியமனத்திற்காக காத்திருக்கும் துறைசார் பட்டதாரிகள் கோரிக்கை



ஹஸ்பர் ஏ ஹலீம்-

கொரோனாவை சுதேச வைத்தியத்தின் மூலம் கட்டுப்படுத்த தகுதி வாய்ந்த 1000 வைத்தியர்கள் வேலைவாய்ப்பின்றி வீட்டில் இருக்கிறோம் என வேலைவாய்ப்பற்ற சித்தவைத்திய சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஹபில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது
ஆயுர்வேத, சித்த, யுனானி வைத்திய துறைகளில் பட்டம் பெற்று உள்ளக பயிற்சிகளை நிறைவு செய்த 1000 வைத்தியர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து அரச நியமனம் கிடைக்காமல் வேலைவாய்ப்பற்ற நிலையில் வீட்டில் இருக்கும் துர்ப்பாக்கிய நிலை நம் நாட்டில் மட்டும் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

தற்போதைய கொரோனா இடர் காலத்தை கருத்தில் கொண்டு சுகாதார துறையை வலுப்படுத்த வேலையற்ற சுதேச வைத்தியர்களுக்கு அரச நியமனம் வழங்கி கொரோனா சிகிச்சை நிலையங்களில் சேவையாற்ற வழி செய்வதே அரசின் புத்திசாலித்தனமானதும் ஆரோக்கியமானதுமான முடிவாகும் என நினைக்கிறேன்.

மேலும் இது தொடர்பாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் கொளரவ சிசிர ஜயகொடி அவர்களுடன் பல முறை பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை. மற்றும் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோரின் அலுவலகங்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை.

மாறாக அலோபதி துறையில் உள்ளக பயிற்சியை தொடங்காத மாணவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பது மிக்க வேதனை அளிக்கிறது.

நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இலவச கல்வியை கற்று சுகாதார துறையில் தேர்ச்சி பெற்ற வைத்தியர்களாகிய எமக்கு உடனடியாக அரச நியமனம் வழங்கி நாட்டு மக்களுக்கு புத்துணர்ச்சியுடன் சேவையாற்ற உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :