இந்த நிலையில் தனி ஒரு மனிதனின் தவறை ஒரு சமூகத்தின் மீதோ, சமயத்தின் மீதோ போடாமல் அந்த மனிதன் மீது மட்டுமே போட்ட பிரதமர் ஜெஸிந்தா மெடம் பாராட்டுக்குரியவர், மரியாதைக்குரியவர், எடுத்துக்காட்டானவர்.
ஜெசிந்தா மெடம் எதிர்க்கட்சி தலைவி அல்ல. நாட்டின் பிரதமர். அத்தகைய பிரதமர் இவ்வாறு துணிச்சலாக பேசியுள்ளார்.
ஆனால் நமது நாட்டில் சில முட்டாள்கள் ஈஸ்டர் தாக்குதலை நடத்திய போது இப்படியொரு வார்த்தையை பிரதமர் ரணிலோ, அமைச்சர் சஜித்தோ சொல்லவில்லை. மாறாக ஒரு அப்பாவி முஸ்லிம் சமூகத்தின் மீது அடிக்க விட்டு பார்த்துக்கொண்டிருந்தனர்.
தனிநபர்கள் தவறு செய்வது எல்லா சமூகங்களிலும் உள்ளது. அதற்காக அந்த சமூகத்தின் மீது பழி போடுவது அறிவுள்ளோர் செயல் அல்ல.
ஆட்சியாளர்களின் மனோ நிலையை வைத்தே நாட்டு மக்கள் எதையும் தீர்மானிப்பர். ஒரு சமூகத்துக்கெதிராக தாக்குதல் நடத்துவதை அரசு அனுமதிக்கும் என்ற உணர்வு இருந்தால் மட்டுமே கும்பலாக தாக்க முனைவர்.
இவ்வாறுதான் 83 ஜூலை தாக்குதலும், கண்டி, திகன, மினுவாங்கொடை, காலி என ஐ தே க ஆட்சியின் அனுமதியுடன் தாக்குதல் நடத்தப்பட்டதாகும்.
அதே போல் யாரோ சிலர் செய்த அமெரிக்க கோபுர தாக்குதலுக்காக அமெரிக்கா ஆப்கான் மீது குண்டுகள் போட்டு லட்சக்கனக்கான பொது மக்களை அழித்தனர்.
இந்த வகையில் பிரதமர் ஜெஸிந்தாவின் வார்த்தைகள் அரசியல் தலைவர்களுக்கு எடுத்துக்காட்டாகும்.
0 comments :
Post a Comment