சமுர்த்தி சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு சௌபாக்கியா விசேட வீடமைப்பு திட்டத்தின் மூலம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் வீடமைப்பு திட்டங்கள் மற்றும் மலசல கூடங்கள் அமைக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டு பயனாளிளுக்கு கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் பிறைந்துறைச்சேனை மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் நான்கு வீடுகள் மற்றும் இரண்டு மலசல கூடங்கள் என்பன கையளிக்கப்பட்டது.
சமுர்த்தி திட்ட முகாமையாளர் ஏ.எல்.எம்.சரீப் தலமையில் நடைபெற்ற நிகழ்வில் செயலக உதவி பிரதேச செயலாளர் ஜனாபா எம்.ஏ.சி.ரமீசா, சமுர்த்தி சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான், சமுர்த்தி பிரிவு உத்தியோகத்தர்களான ஏ.சி.சாதிக்கீன், சி.எம்.எஸ்.இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment