உலகதரிசன நிறுவனம்(World Vision) கல்முனைப்பிராந்தியத்தில் கொவிட்டால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்காக, 80 நோயாளர்கள் கட்டில்களை கல்முனைப்பிராந்தியத்திற்கு அன்பளிப்புச் செய்துள்ளது.
கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணனிடம் ,80கட்டில்களையும் உலகதரிசன நிறுவன பிரதிநிதி கிளாரண்ஸ் சுதர்சன் வழங்கிவைத்தார்.
அவற்றை திருக்கோவில் ஆதாரவைத்தியசாலை மற்றும் அக்கரைப்பற்று ,பாலமுனை ,மருதமுனை ,சாய்ந்தமருது, அன்னமலை ஆகிய பிரதேச வைத்தியசாலைகளுக்கும் வழங்கிவைக்கப்பட்டது. பொறுப்பு வைத்திய அதிகாரிகள் அவற்றை பெற்றுக்கொண்டனர்.
இக் காலம்கருதிய சேவைக்காக, பணிப்பாளர் சுகுணன் உலகதரிசன நிறுவனத்திற்கு நன்றிகூறினார்.
0 comments :
Post a Comment