கல்முனைபிராந்தியத்தில் 26மாதிரிகளில் 17 டெல்டா பிறழ்வுகள்! கல்முனைபிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன்



வி.ரி.சகாதேவராஜா-
கிழக்கு மாகாணத்தின் கல்முனை பிராந்தியத்திலும், டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்முனைபிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தெரிவித்தார் .

கல்முனைப்பிராந்தியத்தில் முதலாவது டோஸ் 98வீதமும் ,இரண்டாவது டோஸ் 73வீதமும் வெற்றிகரமாக ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த பணிப்பாளர் டாக்டர் சுகுணன் சினோபார்ம் வகை தடுப்பூசிகள் டெல்டா திரிபு வைரஸின் தாக்கத்திற்கு எதிராக மிகச்சிறப்பாக தொழிற்படுவதாக ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது என்றார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்;

கிழக்கு மாகாணத்தில் இருந்து கடந்த 04 திகதி ஸ்ரீ ஜயவர்த்தன புர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பட்ட பிசிஆர் மாதிரிகளில் பெறுபேறுகள் கிடைக்கபெற்றுள்ளது.

அவ் மாதிரிகளின் அடிப்படையில், பெரும்பாலான கொவிட் வைரஸ் கிழக்குமாகாணத்தை பொறுத்த வரையில் டெல்டா பிரிவு கொவிட் வைரஸ்சாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்தியத்தில் இருந்து அனுப்பப்பட்ட 26 மாதிரிகளில் 17 டெல்டா, 01 அல்பா ,08 பரிசோதனைக்கு உகந்ததல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்முனை பிராந்தியத்தில் திருக்கோவில் சுகாதார பிரிவைச் சேர்ந்த 81 வயதுடைய முதியவர் ஒருவரும் டெல்டா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

மேலும் கல்முனை பிராந்தியத்தில் டெல்டா பிரிவு வைரஸ் பரவியுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகுணன் தெரிவித்துள்ளார் ...

மேலும் அவர் பொதுமக்களுக்கு விடும் முக்கிய அறிவிப்பு..

பொது மக்கள் தனிப்பட்ட சுகாதார நடைமுறைகளை மிக இறுக்கமாக கடைப்பிடிக்கவேண்டும்..

மற்றும் முகக்கவசத்தினை எந்தவொருநிலையிலும் இன்னுமொருவருக்கு முன் மூக்கு வாய்ப்பகுதியை மூடியவாறு அணிந்திருக்கவேண்டும்..

சமூக இடைவெளியான 2 மீட்டர் தூரத்தை கடைப்பிடிக்க வேண்டும்..
கைகழுவுதலை மிக கடினமாக அடிக்கடி கழுவுதல் வேண்டும்..

முக்கியமாக கூட்டங்கள் கூடுதல் கூட்டமாக இருந்தல் முக்கியமாக தவிர்த்துக்கொள்ளல் வேண்டும்..

தடூப்பூசிகளை முடிந்த அளவு விரைவாக பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்..என்பன அவர் பொதுமக்களுக்கு வழங்கும் அறிவுறுத்தல் ஆகும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :