அட்டன் டிக்கோயா நகரை மூடி சுயதனிமைப்படுத்த ஒத்துழையுங்கள் வர்த்தகர்களுக்கு - முன்னாள் தலைவர் - நந்தகுமார் வேண்டுகோள்



நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
ட்டன் டிக்கோயா நகரசபைக்குற்பட்ட நகர வர்த்தக நிலையங்களை மூடி நகரை சுயதனிமைப்படுத்தி கொரோனா தொற்றை ஒழிக்க வார்த்தகர்களும் பொதுமக்களும் தாமாக முன்வந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அட்டன் டிக்கோயா நகரசபையின் முன்னாள் தலைவர் அழகமுத்து நந்தகுமார் தெரிவித்துள்ளார்
அட்டன் டிக்கோயா நகரசபை எல்லைப்பகுதியில் 60 வீதமான கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் 17/08 விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

நாட்டில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் பலாங்கொடை, இரத்தினபுரி ,பண்டாரவளை ,கேகாலை, உட்பட பல நகரங்கள் மூடப்பட்டு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் பிரதான நகரங்களில் ஒன்றான அட்டன் நகரமானது நாளாந்தம் அதிகளவானோர் வந்து செல்லும் நகரமாக காணப்படுகின்றதுடன் நாளந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது
தற்போது அட்டன் டிக்கோயா நகரசபை ,ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் தொற்றுக்குள்ளாகி 60 வீதம் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று மரணங்களும் அதிகரித்துள்ளது.

ஆகவே அட்டன் டிக்கோயா நகரை சுயதனிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது எனவே நகர வர்த்கர்கள் நகரவாசிகளும் அட்டன் டிக்கோயா நகர சுயதனிமை படுத்த தமது வர்த்தக நிலையங்களை மூடி ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்

மேலும் நகரை அண்டிய பொது மக்களும் இளைஞர்களும் அநாவசியமாக நகரிற்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் தேவை நிமித்தம் வருகைத்தருவோம் முக கவசம் அணிந்து சுகாதார விதிமுறைகளை பேணுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :