இயற்கை உரத்தை பாவித்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அனைவரும் கைகொடுக்க வேண்டும் : விவசாய அமைச்சின் செயலாளர் கலாநிதி உதித் ஜயசிங்க !



நூருல் ஹுதா உமர்-
ஞ்சற்ற இயற்கை உரத்தை பாவித்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க கிராம மட்டத்திலுள்ள அனைவரும் கைகொடுக்க வேண்டும்; மேலும் இயற்கை உரத்தை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அமைச்சின் மூலம் வழங்கப்படும் மானியங்களை பெற்று தர நடவடிக்கை எடுப்பதுடன் ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க பல விவசாயிகளும் அதே போன்று தனியார் நிறுவனங்களும் முன்வந்திருப்பது மகிழ்ச்சிகரமான விடயமாகும்; அசாதாரண சூழ்நிலையிலும் விவசாயிகள் சேதன உரத் தயாரிப்பில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளதை பாராட்டி நன்றிகளை தெரித்துக் கொள்கிறேன் என விவசாய அமைச்சின் செயலாளர் கலாநிதி உதித் ஜயசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் கீழ் தேசிய மட்டத்தில் சேதன உரம் உற்பத்தி செய்யும் இடங்களை மேற்பார்வையிடுவதற்காக விவசாய திணைக்களத்தினதும், விவசாய அமைச்சினதும் உயர் அதிகாரிகள் குழு கடந்த வெள்ளிக் கிழமை இறக்காமம் விவசாய விரிவாக்கல் நிலையத்திற்குட்பட்ட வரிப்பத்தான்சேனை பகுதிக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர். இதன்போது விவசாய அமைச்சின் செயலாளர் இங்கு அதிகாரிகளிடம் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டீ சில்வா அடங்களான உயர் மட்ட குழுவினர் கள விஜயத்தை மேற்கொண்டு சேதன உரம் தயாரிக்கும் இடத்தை பார்வையிட்டனர்.

இக் கள விஜயத்தில் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ், மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர், இறக்காமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ. அஹமட் நஸீல், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், பொறுப்பு விவசாய போதனாசிரியர் எஸ்.ஏ.அஷ்ஹர் மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :