கேஸ் கிடைக்காமையால் அமைதியின்மை



க.கிஷாந்தன்-
ட்டன் நகரத்தில் காணப்படும் லிட்ரோ எரிவாயு விநியோக நிலையங்களுக்கு 10 நாட்களுக்கு பிறகு இன்று 19.08.2021 வியாழக்கிழமை லிட்ரோ எரிவாயு விநியோகம் நடைபெற்றதால் பொதுமக்கள் அதனை பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று எரிவாயுவை பெற்று சென்றனர்.

எனினும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கோரிக்கைக்கு ஏற்ப லிட்ரோ எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியவில்லை.

இதனால் எரிவாயுவை கொள்வனவு செய்ய காத்திருந்த சிலருக்கு கேஸ் கிடைக்காமையால் அமைதியின்மையில் ஈடுப்பட்டுள்ளனர்.

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் குறித்த விற்பனை நிலையத்தில் இன்று விற்கப்படுவதாக அறிந்த நுகர்வோரே இவ்வாறு கூடியிருந்தனர்.

எனினும் எரிவாயு நிறுவனத்தால் இன்று வழங்கப்பட்ட 75 சிலிண்டர்கள் கடைகளுக்கு வழங்கப்பட்டதாகவும் அவற்றை பலருக்கு வழங்க முடியாது போனதாக கேஸ் விற்பனையாளர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :