ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டம் மேன்மைதங்கிய பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ச அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஜனாதிபதி செயலணியின் தலைவரும் நிதி அமைச்சரும் ஆகிய பசில் ராஜபக்ச அவர்களின் ஆலோசனையில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் தலைவருமாகிய கௌரவ அங்கஜன் ராமநாதன் அவர்களின் தலைமையில் "சமுர்த்தி அருணலு" என்னும் சமுர்த்தி வாழ்வாதார அபிவிருத்தி செயற்திட்டம் இன்றைய தினம் (19.08.2021) சங்கானை பிரதேச செயலகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
யாழ்மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்களின் சிபார்சிற்கு அமைவாக, சமுர்த்தி வதிவிடப் பொருளாதார நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் 2 இலட்சம் சமுர்த்தி குடும்பங்களை மையமாகக் கொண்ட பூரணத்துவமான வதிவிடம் சார் மனைப் பொருளாதார அலகு மற்றும் சார்பு நிலை கிராமங்களை வலுப்படுத்தல் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சங்கானை பிரதேச செயலாளர் சமுர்த்தி முகாமையாளர் உதவி திட்டமிடல் பணிப்பாளர் கணக்காளர் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கௌரவ அங்கஜன் ராமநாதன் அவர்களின் இணைப்பாளர் மற்றும் பிரதிநிதிகள் ஒருங்கிணைப்புக்குழு அலுவலக உத்தியோகத்தர் மற்றும் பயனாளிகளும் சுகாதார விதிகளைப் பின்பற்றி கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment