ஊழலை ஒழிப்பதும் ஆய்வு கலாசாரத்தை கட்டியெழுப்புவதமே எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பாகும்.-தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் எம்.எம்.எம். நாஜீம்





ஏ.பி. அப்துல் கபூர்-
லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக 2015ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தான் நியமிக்கப்பட்ட பொழுது தன்னிடம் இரண்டு பொறுப்புக்கள் வழங்கப்பட்டதாகவும் அதில் ஒன்று இந்தப் பல்கலைக்கழகத்தில் நிலவுகின்ற ஊழல் கலாசாரத்தை ஒழிப்பதும் மற்றும் இப்பல்கலைக் கழகத்தில் ஆய்வு கலாச்சாரத்தினை ஊக்குவிப்பதும் ஆகும் என்று இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரையில் பணியாற்றிய பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களுக்கான பிரியாவிடை வைபவம் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்பது எமது நாட்டில் காணப்படுகின்ற மிகவும் அழகியதொரு பல்கலைக்கழகம் ஆகும். இந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களும் மிக அழகிய மனிதர்கள் ஆகும். ஆனால் தான் இந்தப் பல்கலைக்கழகத்தில் உபவேந்தராக கடமையாற்றிய காலப்பகுதியில் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பொழுது நான் பல்வேறு சவால்களை மற்றும் உயிர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு என்மீது விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தான் அவ்வாறு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை எல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எனது ஆளுமையை விருத்தி செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். எடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் எண்ணெய் பலவீனப்படுத்த வில்லை மாறாக அவைகள் என்னை பலப்படுத்தியவைகளாகவே நான் பார்க்கிறேன். இன்று இந்த நாட்டில் இருக்கின்ற பல்கலைக்கழகங்களில் மிக முக்கியமானதொரு பல்கலைக்கழகமாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் திகழ்கின்றது.
எதிர்வரும் 9ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் இப்பல்கலைக் கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் இப்பல்கலைக்கழகத்தினை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வார் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் கிடையாது. ஏனெனில் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் என்னை விட மிக சிறந்த கல்வி தகைமைகளை உடைய ஒருவராவார். இவர் என்னை விட பலம் மிக்கவர். இவர் இப்பிராந்தியத்தில் பிறந்து வளர்ந்து இந்தப் பல்கலைக்கழகத்தின் உடைய உபவேந்தராக இன்று பரிணமிக்கின்றார். இவர் இப் பல்கலைக்கழகத்திலேயே கல்வி கற்று பல்கலைக்கழகத்தின் ஓர் வெளியீடாக காணப்படுகின்றார். நான் எதிர்கொண்ட அச்சுறுத்தல்களை போல இவர் அச்சுறுத்தல்களை எதிர் கொண்டாலும் அவற்றை சாணக்கியமாக வெற்றி கொள்ளக்கூடிய தன்மை இவரிடம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையிலான இந்த பல்கலைக்கழகம் எதிர்காலத்தில் பல்வேறு சாதனைகளை புரிய வேண்டும் என வாழ்த்துகிறேன். நான் இப்பல்கலைக்கழகத்தை நேசிக்கின்றேன். இப்பிரதேச மக்களை நேசிக்கின்றேன். இவ்வாறானதொரு பல்கலைக்கழகம் இலங்கையில் இல்லை என்றே நான் எப்பொழுதும் கூறுவேன். இந்தப் பல்கலைக்கழகத்தினுடைய அழகு மற்றும் இப்பிரதேச மக்களினுடைய நற்பண்புகள் அனைத்தையும் தான் இப்பல்கலைக்கழகத்தில் இருந்து விடை பெற்றுச் சென்றாலும் அவை அத்தனையையும் என்னுடன் நான் எடுத்துச் சென்று அவற்றை எனது ஞாபகச் சின்னங்களாக எனது மனதில் பூட்டி வைப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக பணியாற்றி விடுகை பெற்றுச் செல்லும் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பல்கலைக்கழக பீடாதிபதிகள், பேராசிரியர்கள்
, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேரவை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :