கல்வியமைச்சின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு டெப் வழங்கும் நிகழ்ச்சிதிட்டத்தின் திருகோணமலை வலய கல்வி மாணவர்களுக்கான டெப் வழங்கும் நிகழ்வு இன்று திருகோணமலை விவேகானந்த கல்லூரியில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான கபில நுவன் அத்துக்கோரல தலைமையில் நடைபெற்றது.
மாணவர்களது கல்விச்செயற்பாடுகளை மேலும் விருத்தி செய்யும் நோக்கிலும் தகவல் தொழிநுப்ப அறிவுசாதனத்தைப்பயன்படுத்தி நவீன யுகத்திற்கேற்ற மாணவர்களாக மாற்றியமைக்கும் நோக்கில் இவ்வாறான டெப்கள் நாடாளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது மொத்தமாக 15 பாடசாலைகளுக்கு 947 டெப்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் திருகோணமலை வலயக் கல்விப்பணிப்பாளர் எஸ்.சிறிதரன்,கந்தளாய் வலயக்கல்விப் பணிப்பாளர்,அதிகாரிகள்,அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment