அரசாங்க ஊழியர்களின் வேலை நாட்கள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!



டுத்த மாதம் முதல் அரசாங்க ஊழியர்களை வழமை போன்று பணிக்கு அழைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறைந்தளவான பணியாளர்களுடன் நிறுவன நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாக அமைச்சின் செயலாளர்கள் பலர் அறிவித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்து அரச ஊழியர்களையும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் மீண்டும் சேவைக்கு அழைப்பது தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அரச நிறுவனங்களின் ஊழியர்கள், தற்போது வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் சேவைக்கு அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :