தீர்மானத்தினை மீறினால் கொரோனா சட்டத்தினை மீறியமை தொடர்பில் சட்ட நடவடிக்கைஎஸ்.எம்.எம்.முர்ஷித் -
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் தனியார் வகுப்பு நடாத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறி செயற்பட்டால் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன், கொரோனா சட்டத்தினை மீறியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையிலும், ஐந்து மரணங்கள் இடம்பெற்ற நிலையிலும் அவசர கூட்டம் செயலக கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

இதன்போது இராவணுவத்தினர் மோட்டார் சைக்கிளில் ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளல், பிரதேச மட்ட கொரோனா குழு, பள்ளிவாயல்கள், பொலிஸார் இணைந்து கிராம மட்டத்தில் அவதானிப்புக்களை மேற்கொள்ளல், மீன் பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்கு பிரதேச செயலக உதவித் திட்ட பணிப்பாளர், மீன்பிடி பரிசோதகர் மற்றும் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக முகாமையாளர் ஆகியோர் இணைந்து திட்டம் வகுத்தல்.

கிராம மட்ட குழு கூடி ஒவ்வொரு கிராமத்திற்குமான விழிப்புணர்வு மற்றும் முன்னெடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் செயலகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தல், உள்ளுர் கடைகளுக்கு வீட்டு விநியோகம் வழங்குதல் தொடர்பில் கிராம மட்ட குழு தீர்மானித்தல், கிராம மட்டத்தில் நடைபெறும் ஒன்று கூடல், திருமண நிகழ்வு, வீடுகளில் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெறுவதை கிராம மட்ட குழு கண்காணித்து நடவடிக்கை எடுத்தல்

மரணங்கள் தொடர்பில் இன்னும் சில தினங்களில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலாசனை பெற்று அது தொடர்பான நடவடிக்கை அறிவிக்கப்படும். இக்குழுவில் வாழைச்சேனை வர்த்தக சங்கம் மற்றும்; பள்ளிவாயல்கள் இணைந்து சேவையாற்றும்.

மேற்படி மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுவோர் தனியார் வகுப்பு நடாத்துவோர் கண்டுபிடிக்கப்பட்டால் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தல் நடவடிக்கை செய்யப்பட்டு சட்ட நடவக்கை மேற்கொள்ளப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்காப், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.றுவைத், பள்ளிவாயல் பிரதிநிதிகள், வாழைச்சேனை வர்த்தக சங்க பிரதிநிதிகள், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் கிராம சேவை அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :