பிரதிக்கல்விப்பணிப்பாளர் நௌசாட் மாவனல்ல சாஹிரா தேசிய பாடசாலைக்கு அதிபராக நியமனம்.வி.ரி.சகாதேவராஜா-
ம்மாந்துறை வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் எ.எம்.நௌசாட் கல்வியமைச்சின் செயலாளரினால் மாவனல்ல சாஹிரா தேசிய பாடசாலைக்கு அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அரச சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவை குழுவின் அனுமதியின் அடிப்படையில் கல்வியமைச்சின் செயலாளரினால் உடன் செயற்படும் வண்ணம் இலங்கை கல்வி நிர்வாக சேவை இரண்டாம் வகுப்பைச் சேர்ந்த ஏ. முஹம்மது நெளஸாத் மாவனல்ல சாஹிரா தேசிய பாடசாலைக்கு புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதம் கல்வி அமைச்சில் நேற்று வழங்கப்பட்டது. மாவனெல்ல சாஹிரா தேசியபாடசாலை அதிபர் பதவி இ.க.நி.சேவை தரம் 2க்கான பதவி என்பதால் நேர்முகப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று முதல்தெரிவில் இவர் அங்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சம்மாந்துறையைச்சேர்ந்த ஜனாப் நௌசாட் கல்விப்புலத்தில் 9வருடசேவையைக்கொண்டவர்.
கொழும்பு பல்கழைலக்கழகத்தில் தகவல்தொழினுட்ப பட்டதாரியான இவர் ஆசிரியராக றாணமடு இந்துமகாவித்தியாலயத்தில் ஒருவருடம் கற்பித்தவேளை இலங்கைகல்வி நிருவாகசேவையில் இணைந்துகொண்டார்.


இசுருபாய கல்வியமைச்சு வடமத்தியமாகாண கல்வித்திணைக்களம் மூதூர் வலயக்கல்விப்பணிமனை கிழக்குமாகாண கல்வித்திணைக்களம் ஆகிய இடங்களில் கல்விநிருவாகசேவைபதவிகளை வகித்து திறம்படசேவையாற்றிவர்.

இறுதியாக கடந்த நான்கு வருடங்களாக சம்மாந்துறை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வருகிறார் என்பதும், அண்மையில் எ.எம்.நௌஷாட் 'அஸ்-ஸிராஜின் வரலாற்றேடு' எனும் வரலாற்றுநூலை எழுதி வெளியிட்டுவைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Attachments area


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :