சீமெந்து ஏற்றிவந்த லொறியின் டயர் வெடித்து விபத்து; சாரதிக்கு படுகாயம்எச்.எம்.எம்.பர்ஸான்-
சீமெந்து ஏற்றிவந்த லொறி ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் இன்று (3) மாலை இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவாக்கேணி பிரதான வீதியில் வைத்தே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் இருந்து நிந்தவூர் பிரதேசத்துக்கு சீமெந்து ஏற்றி செல்லும் போது லொறியின் டயர் வெடித்ததில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இவ் விபத்தில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் வண்டியுடன் லொறி மோதி பின்னர் வீதியோரத்தில் இருந்த பனைமரத்தில் மோதியுள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த லொறியின் சாரதி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :