நீண்ட நாள் நோய்களுக்கான சிறந்த தீர்வு மாற்று முறை வைத்தியம் என்கிறார் வைத்திய நிபுணர் எச்.எம். ரபீக்நேர்காணல் சில்மியா யூசுப்-
மாற்று முறை துறையில் அனுபவம் பெற்ற வைத்திய நிபுணர் எச். எம் ரபீக் உடனான நேர்காணல்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

நீண்ட நாள் அவதிப்பட்டு இருக்கும் வலிகளுக்கு குறிப்பாக மூட்டு வலி, ஒற்றை தலைவலி,முழங்கால் வலி, போன்றவற்றுக்கு சிறந்த சிகிச்சைகளை வழங்கி வருகின்றார் வைத்திய நிபுணர் எச். எம் ரபீக்.

இவர் மாற்று முறை வைத்தியதுறையில் பலவிதமான ஆராய்ச்சிகளை செய்தது மற்றுமன்றி வெளிநாட்டில் மாற்றுமுறை வைத்தியத்துறையில் மிக முக்கியமான விரிவுரையாளராகவும் காணப்படுகின்றார்.

மேலும், கதிரொளி மூலம் சில நோய்களையும், சீன வைத்திய முறை மூலம் ஆய்வு செய்கின்றார். சில வைத்திய முறைகள் இவரால் முடியாது பட்சத்தில் குறித்த நோய்களுக்கு சம்பந்தப்பட்ட வைத்தியரிடம் தொடர்பு கொண்டு அந்த நோயாளிகளுக்கு சிகிச்சைகளுக்காக இவர் வழிகாட்டுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று அதிகமானோர் தற்போது முகம் கொடுத்து வரும் பிரச்சினைகளாக உடல் வலி ,மூட்டு வலி, முழங்கால் வலி, ஒற்றைத்தலை வலி போன்ற பல பிரச்சினைகளை மக்கள் சந்திந்து வருகின்றனர் என வைத்தியர் ரபீக் குறிப்பிட்டார்.
தொடந்தும் அவர் இது பற்றி குறிப்பிடுகையில், பல பிரபலங்கள் கூட மாற்றுமுறை (Alternative medicine) வைத்திய சிகிச்சை முறைமைகளை என்னிடம் பெற்றுள்ளனர்”
மாற்று முறை வைத்தியமானது ஆங்கில வைத்தியத்தியத்திலிருந்து வேறுபட்ட ஒரு வைத்தியமாக காணப்படுகின்றது. இதில் பலவகையான துறைகள் காணப்படுகின்றன..
அதாவது Acupuncture, Cupping therapy Herbal medicine, Nutrition,Diet, color treatment, detox type of treatment , physio therapy type of management, Counseling போன்ற பல துறைகள் காணப்படுகின்றன.
குறிப்பாக உடலில் ஏற்படும் வலிகளுக்கு மாற்றுமுறை வைத்திய முறையினால் இவ்வாறான சிகிச்சை முறைகளை பயன் படுத்தி் நோயுற்ற மக்களுக்கு உதவி புரிகின்றோம் என்றார்.
தெஹிவலையில் இருக்கும் இவரது கிளினிக்கை சிறந்த நவீன உபகரணங்களுடன் பயன்படுத்தி நோயாளிகளை நல்ல முறையில் பேசி அவர்களது நோய்களை ஆராய்ந்து குறித்த நோய்களுக்கான சிகிச்சைகளும், டயட் (Diet) உணவு முறைகள் பற்றி அறிவுரைகளும் வழங்கி வருகிறார்.

டாக்டர் ரபீக், குறிப்பாக சிகிச்சை வழங்குவது மற்றுமன்றி சிறந்த உள ஆற்றுப்படுத்தல் நிபுணராகவும் காணப்படுகிறார். இவரிடம் சிகிச்சைக்காக வருபவர்கள் உயர் வணிகத்துறையில் பிரசித்தி பெற்றவர்களாகவும், நிர்வாகிகளாகவும், அரசியல்வாதிகளாகவும் மற்றும் சாதாரண மக்களாகவும் உள்ளனர் என தெரிவித்தார்.
இவர் யூரோப், நாடுகளில் சுமார் 30 வருடங்கள் இருந்து உயர்கல்வியை UK, USA, Spain போன்ற நாடுகளில் படித்து பட்டம் பெற்றுள்ளார். இது மாத்திரமன்றி இம் மாற்று முறை சிகிச்சையில் சிறந்த அனுபவம் பெற்றவராகவும் காணப்படுகிறார்.
Complimentary ,Alternative ( மாற்று முறை சிகிச்சை) யில் சிறந்த வல்லுனராக இருக்கும் வைத்தியர் ரபீக் அவர்கள் இங்கிலாந்தில் கல்வி கற்று சவுதி அரேபியாவில் 20 வருடங்களுக்கு மேலாக சேவை செய்து தன் துறையில் பரிச்சயம் பெற்று இலங்கைக்கு வந்துள்ளேன் என தெரிவத்தார்

வைத்திய துறையில் இருக்கும் இவரின் மற்றொரு கனவாக " இலங்கையில் தமது ஊர் மக்களுக்கும் இவ்வாறான சிகிச்சை முறைகளை அறிமுகம் செய்து இதனூடாக மக்களின் உடல் நிலை சார்ந்த நோய்களை மாற்று முறை சிகிச்சை மூலம் குணப்படுத்துவதாகும்" என குறிப்பிட்டார்.

தற்போது இயங்கி வரும் இவரது மருத்துவமனையில் வலிகளுக்கான பல்வேறுபட்ட சிகிச்சைகள் காணப்படுகின்றன. ​​
குறிப்பாக எவ்வாறான நோய்களுக்கு எந்த முறையில் சிகிச்சைகளை உரிய நோயாளிகளுக்கு செய்து வருகின்றார்.

அதாவது மாற்று முறை சிசிச்சை (Complementary Alternative Medicine), Counselling, oil treatment, herbal medicine, light treatment Nutrition,Acupuncture, physio type of treatment, Diet and counseling,cupping therapy
போன்ற பல மாற்று சிகிச்சை முறையிகளும் தற்போது அவரது சிகிச்சை நிலையத்தில் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடதக்கது.

மேலும் அமெரிக்காவில், பாரம்பரிய மாற்று முறை சிகிச்சையை (Complementary Alternative Medicine) பெரியவர்களும் சிறுவர்களும் பயன்படுத்துகின்றனர். இச் சிகிச்சையின் எடுத்துகாட்டாக இப் பாரம்பரிய மாற்று மருந்தாகும். இந்த துறையில் Acupuncture, Homeopathy மற்றும் ஓரியண்டல் சிகிச்சை,ஆயுர்வேதம், நடைமுறைகள் போன்ற சிகிச்சையின் முக்கியமான மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவங்களில் உள்ளன. இந்த சிகிச்சைகள் உலகளவில் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் காணப்பட்டு வருகின்றன.

உடல் நுட்பங்கள் பெரும்பாலும் மனதுடன் இணைக்கப்படுகின்றன. இருப்பினும் உடல் சிகிச்சையின் எடுத்துக்காட்டுகளாக, சிரோபிராக்டிக் மற்றும் osteopathy , உடல் இயக்கம் சிகிச்சைகள், தாய் சி மற்றும் யோகா செய்வதும் உணவு மற்றும் மூலிகைகள், இறைச்சிகள், பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் அடங்கிய ஒரு எளிய உணவு வகைகளை உட்கொள்வதும் எமது உடலுக்கு மிக அவசியமாகும். பெரும்பாலும் கொழுப்பு எண்ணெய் நிறைந்த உணவுகள் மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளைக் உட்கொள்வதால் தான் இன்று சமூகத்தில் ஊட்டச்சத்து அதிகப்படியான மற்றும் குறைபாடு பிரச்சினைகளாகவும், உடல் நோய் பிரச்சைகளாகவும் மாறியுள்ளன. இவைகள் மனிதனுக்கு நாட்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.


பல உணவு மற்றும் மூலிகை அணுகுமுறைகளானது உடலின் ஊட்டச்சத்து நல்வாழ்வை சமப்படுத்த முயற்சிக்கின்றன. உணவு மற்றும் மூலிகை அணுகுமுறைகளில் பின்வருவன அடங்கும் உணவுப் பொருட்கள், மூலிகை மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து / உணவு வெளிப்புற ஆற்றல், ஒரு நபரின் ஆரோக்கியத்தை நேரடியாக வழங்கும் என நம்பப்படுகின்றது.
வெளிப்புற ஆற்றல் சிகிச்சையின் ஒரு எடுத்துக்காட்டுகளாக மின்காந்த சிகிச்சை, ரெய்கி மற்றும் உணர்வுகள். புலன்கள், தொடுகை, பார்வை, கேட்டல், வாசனை மற்றும் சுவை ஆகியவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை வழங்கும் என்று சிலர் நம்புகிறார்கள். புலன்களை உள்ளடக்கிய சிகிச்சைகளின் எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு: கலை, நடனம் மற்றும் இசை காட்சிப்படுத்தல் மற்றும் வழிகாட்டப்பட்ட படங்கள்
"பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளரால் நடத்தப்படும் போது பெரும்பாலான மாற்று முறை சிகிச்சைகள் பாதுகாப்பானவை என்று கருதப்படுகிறது," என டாக்டர் ரபீக் தெரிவித்தார்.

எனவே இவரது தெஹிவலையில் இயங்கி வரும் மருத்துவமனையானது எப்போதும் இவ்வாறான ஆரோக்கியமான சிகிச்சைகளை வழங்குவதற்கும் சிறந்த முறையில் எவ்வித பாதிப்புமின்றி வலிகளை போக்குவதற்கும் மக்களுக்காக திறந்திருக்கும் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :