போர்ட் சிட்டி விவகாரத்தில் பாராளுமன்றத்தில் அரசுக்கு சார்பாக வாக்களித்தால்; வர இருக்கும் சமூகத்துக்கு செய்யும் ஒரு பாரிய சமூகத்துரோகம்.-முஸம்மில் மொஹிதீன்எப்.முபாரக்-
சிறுபான்மை மக்களின் பாராளுமன்ற பிரதி நிதிகள் போர்ட் சிட்டி விவகாரத்தில் பாராளுமன்றத்தில் அரசுக்கு சார்பாக வாக்களித்தால் சிறுபான்மை சமூகத்தின் முன்னால் வர இருக்கும் சமூகத்துக்கு செய்யும் ஒரு பாரிய சமூகத்துரோகம் என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்தார்.
போட் சிட்டி சட்டமூலம் தொடர்பாக கேட்ட போதே ஊடாகங்களுக்கு அவர் இன்று(20) இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்:
விசேடமாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தயவு செய்து உங்கள் தற்சமய அடைவுகளை சிந்திக்க வேண்டாம் நீங்கள் யாவரும் தன்னிறைவு பெற்றவர்களே ஆகவே உங்களை நம்பி வாக்களித்த எம் சமூகத்தின் 20 வருடங்களுக்கு முன்னால் வர இருக்கும் சமூகத்தை பற்றி சிந்தித்து உங்கள் கைகளை உயர்த்துவதில் இருந்து தவிர்துக்கொள்ளுங்கள்.

போட்சிட்டிக்காக வேண்டி நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தினை விற்று குளிர்காய்ந்து விடாதிர்கள்,பரந்து வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் அப்பாவி முஸ்லிம்களை இக்கட்டான நிலைக்கு ஆக்கி விட முயற்சிக்க வேண்டாம்.

இந்த சீன நாட்டின் போட் சிடி பிரவேசம் என்பது எமது சமூக சர்வதேச வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து ஒழிந்துவிடும் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.

நாட்டில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் வியாபாரிகளை அவர்களின் சொத்துக்களை முடக்கி ஆளுவதான ஒரு செயற்பாடு தான் போட் சிட்டியில் காணப்படுகின்றது.
சில முஸ்லிம் அரசியல் வங்குரோத்து காரர்கள் போட் சிட்டியால் நன்மை என்றார்கள்,அரசாங்கத்தின் அற்ப சுகபோகங்களுக்காக இவர்கள் முஸ்லிம் சமூகத்தினை விற்க முனைகின்றார்கள் என்பது புலனாகின்றது.

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சரியான சமூக சிந்தனையுடைய நாட்டு மற்றும் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து கொள்ளுங்கள் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :