வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பொலிஸாரும், இராணுவ படையினரும் இணைந்து பரிசோதனைஎஸ்.எம்.எம்.முர்ஷித்-
யணத்தடை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு முழுமையாக முடங்கிய நிலையில் உள்ளதைக் காணமுடிகின்றது.

கொரோனா தொற்றினை தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட பயணத்தடை காரணமாக நாட்டின் அனைத்து பகுதிகளும் முடங்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மருந்து விற்பனை நிலையங்களைத் தவிர அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், அரச தனியார் போக்குவரத்துகளும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவை கருதிய செயற்பாடுகள் மட்டும் நடைபெறுவதுடன், ஏனைய அனைத்து சேவைகளும் முடங்கிய நிலையில் உள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் காணப்படுவதால் குறித்த பிரதேசத்தில் பொலிஸாரும், இராணுவ படையினரும் இணைந்து வீதி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :