முஷாரப் மீது குற்றம் சாடும் கட்சியினர்



கில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாத் பதியூத்தீனின் கைது ஒரு முறையற்ற செயற்பாடாகும். அவரின் கைதை முஸ்லிம் மக்கள் மாத்திரமின்றி தமிழ் மக்களும் அதற்கு பாரிய எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி வருகின்றனர் என சிலோன் மீடியோ போரத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் ஊடகவியலாளருமான எஸ்.துஷாரா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம்களின் தேசிய தலைவராக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர்தான் ரிஷாத் பதியூத்தீன் ஆகும். அவரை புனித நோன்பு காலம் என்று கூட பாராது கைது செய்து விளக்கமறியளில் வைத்திருப்பது முஸ்லிம் மக்களிடையே பெரும் துக்கத்தையும் அரசின் மீது வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அவரின் கைதை கண்டிக்கும் வகையில் புனித நோன்புப் பெருநாள் தினத்தன்று கிழக்கு வாழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் முதுநபின் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினர்கள் தொடக்கம் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வரை அவரின் கூற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இது முஷாரப் என்ற நபர் மீது கொண்ட அதிர்ப்தியா? அல்லது அக்கட்சியின் தலைவர் ரிஷாத் மீது கொண்ட அதிர்ப்தியா? அல்லது ரிஷாத் என்பவரை தொடர்ச்சியாக விசாரணைக் கைதியாக தொடர்ந்தும் விளக்கமறியலில் வைத்திருக்க வேண்டும் என்ற சிந்தனையா? இதில் எது உண்மை நிலை என்று தெரியாவர்களாக கட்சிப் போராளிகள் தின்டாட்டத்தில் உள்ளனர்.

அரசியல் இலாபம் தேடும் சிலர் கட்சிக்குள்ளேயும், வெளியேயும் பாராளுமன்ற உறுப்பினர் மீது குற்றம் சுமத்தி வருகின்றமையும், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையின்மையையும், ஒழுக்கம் இன்மையையும் வெளிக்காட்டுகின்றது. இந்த செயற்பாடுகள் யாவும் கட்சியின் வீழ்ச்சிக்கு மட்டுமல்ல தலைமைக்கு கட்டுப்படாத தன்மையையும் வெளிப்படுத்துகின்றது என்பது மட்டும் உண்மை.

நோன்புப் பெருநாள் தினத்தன்று முஸ்லிம்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் முதுநபின் விடுத்திருந்தது, அவர் கட்சி மீதும், தலைவர் மீதும் கொண்ட அதீத பற்று காரணமாகவே அன்றி, அரசியல் இலாபம் தேடும் நோக்கமல்ல என்பதை புரியாத சிலர் அவரை விமர்சிப்பது என்பது கவலைக்குரிய விடயமாகும்.

எனவே, முஷாரப் என்ற நபர் கூறிய கூற்றை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, கட்சியின் நலனுக்காகவும், கட்சியின் தலைவரின் விடுதலைக்காகவும் ஒன்றிணைந்து செயற்பட முயற்சிக்கவேண்டுமே தவிர ஒருவருக்கொருவர் குறை கூறுவதை தவிர்ந்து நடப்பது காலத்தின் தேவையாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :