விரைந்த சேவையால் நிலையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த கல்முனை மாநகர தீயணைப்பு படையினர் !!!



நூருள் ஹுதா உமர், பாரூக் சிஹான்-
ம்மாந்துறை பொலிஸ், நிந்தவூர் பிரதேச செயலக மற்றும், சபை எல்லைக்குட்பட்ட செயின் முஹம்மட் ஜெமீல் என்பவருக்கு சொந்தமான கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் அதன் அருகில் இருந்த மரத்தளபாட வேலைத்தளம் ஒன்றும் நேற்று இரவு 7.50 மணியளவில் தீக்கிரைக்கு இலக்காகி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

கல்முனை மாநகர சபைக்கு கிடைக்கப் பெற்ற அழைப்பை ஏற்று 08 நிமிடங்களுள் விரைந்து வந்த கல்முனை மாநகர தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதன் போது களத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் ஆஷ்ரப் தாஹீர் தேவையான அனைத்து வகையான முன்னெடுப்புக்களையும் செய்தார். இதன்போது கருத்து தெரிவித்த வர்த்தகர் சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்த வர்த்தக நிலையத்தை திறந்ததாகவும் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :