ஒட்டமாவடி மையவாடியில் நேற்று மட்டும் இருபத்தொரு ஜனாஸாக்கள் நல்லடக்கம்!எஸ்.எம்.எம்.முர்ஷித்-
லங்கையில் கொரோனாவினால் மரணமடையும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) மையவாடியில் நேற்று சனிக்கிழமை இருபத்தொரு ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது என ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.

ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை பகுதியில் கொரோனாவால் மரணத்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

கொரோனாவினால் மரணமடையும் சடலங்களை அடக்கம் செய்யும் ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) மையவாடியில் நேற்று சனிக்கிழமை வரை 322 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதில் முஸ்லிம் ஜனாஸாக்கள் 298, இந்து சடலம் 11, கிறிஸ்தவம் 08, பௌத்தம் 03, வெளிநாட்டவர்கள் 02 (நைஜீரியா மற்றும் இந்தியா) உட்பட 322 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) மையவாடியினை பயன்படுத்தி கொரோனாவில் மரணிப்பவர்களின் உடல்களை காட்டி சிலர் பணம் அறவிடுவதாக தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறு எமது சபையினூடாக பணம் அறிவிடப்படவில்லை. அவ்வாறு யாருக்கும் பணம் வழங்க வேண்டாம் என்றும், பணம் கோருபவர்களை பிரதேச சபைக்கு தெரியப்படுத்துமாறும்; வேண்டுகின்றேன்.

கொரோனாவால் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு பிரதேச சபைக்கு ஓட்டமாவடி சுகாதார பிரிவினர், பாதுகாப்பு பிரிவினர், ஓட்டமாவடி பிரதேச செயலகம் ஆகியன பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது.

சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) மையவாடியில் கொரோனாவில் மரணமடைந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

நாட்டின் கொரோனா மரணம் அதிகரித்து வரும் நிலையில் இலங்கையில் வேறு பாகங்களிலும் அடக்கம் செய்வதற்கு உரிய இடங்களை அரசியல்வாதிகள், சமூக ஆர்வளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :