காரைதீவில் சட்ட விரோதமான முறையில் வைத்திருத்த மதுபான போத்தல்கள் பொலிஸாரால் மீட்பு



நூருல் ஹுதா உமர்-
ம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு 12 ஆம் பிரிவில் சட்ட விரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி வீட்டில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 80 மதுபான போத்தல்கள் சம்மாந்துறை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது .

சம்மாந்துறை பொலிஸ் பிரிவின் காரைதீவு உப பொலிஸ் காவலரன் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற ரகசிய தகவலையடுத்து சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் அவர்களின் வழிகாட்டலில் காரைதீவு உப பொலிஸ் காவலரன் பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமையான கே.கே. அமரானந்த தலைமையிலான பொலிஸ் குழுவினரினால் வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :