இனரீதியாக கல்முனையில் பிரதேச செயலகம் கேட்போர் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களுக்கு பிரதேச செயலகம் வழங்க தயாராக உள்ளார்களா? : தே.கா அமைப்பாளர் றிசாத் செரிஃப் கேள்வி



நூருல் ஹுதா உமர்-
மீபத்தைய நாட்களில் பேசுபொருளாக மாறியிருக்கும் கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை காரியாலய விவகாரமானது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் குறித்த பிரச்சினைகள் தொடர்பிலான போதிய அறிவின்மையால் வெளியான கருத்துக்களே அன்றி வேறில்லை. கல்முனை எனும் பிரதேசத்திற்கு பிரதேச செயலகம் ஒன்றுதான் இருக்க வேண்டும். அதனை நிர்வகிப்பவர் தமிழராக, முஸ்லிமாக, கிறிஸ்தவராக யாராக இருந்தாலும் சரி சிறப்பான நிர்வாகி இருந்தால் போதுமானது என தேசிய காங்கிரசின் கல்முனை அமைப்பாளரும், கடந்த பொதுத்தேர்தலின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமான ஆசிரியர் றிசாத் செரிஃப் தெரிவித்தார்.

இன்று (05) மாலை கல்முனையில் அமைந்துள்ள தேசியகாங்கிரஸ் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இனவாதமாக, பிரதேசவாதமாக அரசியல் செய்ய யாரும் எந்த இன மக்களையும் உசுப்பேத்த கூடாது. எல்லோரும் இலங்கையர்கள், நாம் நமக்குள் சகோதரர்களாகவே வாழ்கிறோம். அரசியலுக்காகவும், இன்னோரென்னா தேவைகளுக்காகவும் மக்களை மூட்டிவிடுவது கூடாத செயலாகும். கல்முனையில் வாழும் 25 சதவீத தமிழ் மக்களுக்காக கல்முனையை இன ரீதியாக பிரித்து கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை கோருவோர் காரைதீவிலிருந்து 48 சதவீதம் வாழும் முஸ்லிங்களுக்கு மாளிகைக்காடு- மாவடிப்பள்ளி பிரதேச செயலகத்தை உருவாக்கி கொடுப்பார்களா இல்லை நாவிதன்வெளி பிரதேச செயலகத்திலிருந்து அங்கும் 42 சதவீதம் வாழும் முஸ்லிங்களுக்காக மத்தியமுகாம் பிரதேச செயலகத்தை உருவாக்கி கொடுப்பார்களா என்று கேட்க விரும்புகிறேன்.

தமிழ் பிரதேச செயலகம் கேட்போரின் உண்மையான நோக்கம் உள்ளுராட்சி சபையே அன்றி வேறில்லை. நாட்டில் உள்ள எல்லா பிரதேச செயலகத்திலும் நடப்பது அரச நிர்வாகம். அதில் தமிழர், முஸ்லீம், சிங்களவர் என்று எவ்விதபாகுபாடும் காட்ட முடியாது. எல்லோருக்கும் ஒரே வகையான சேவைகளையே அங்கு வழங்கப்படுகிறது. அது போன்றே கல்முனை பிரதேச செயலகமும் இயங்குகிறது. குறித்த கல்முனை பிரதேச செயலகத்தில் இனரீதியாக தமிழ் மக்கள் வஞ்சிக்கப்பட்டால் அதற்க்கு எதிராக தமிழ் மக்களுடன் இணைந்து அவர்களுக்கு ஆதரவாக போராடி நீதியை பெற்றுக்கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

இந்த பிரதேச செயலகத்தை நிர்வாகிக்க எந்த மதத்தையும், எந்த பிரதேசத்தையும் சேர்ந்த எந்த நிர்வாக சேவை அதிகாரியும் நிர்வகிக்க முடியும். இல்லை எங்களுக்கான செயலகம் உருவாக்கிய ஆகவேண்டும் என்றால் அரசால் நியமிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய ஆணைக்குழுவினரால் சரியான எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படும் வரை காத்திருக்க வேண்டும். அது போன்றே சமூகத்தை குழப்பும் விதமாக அம்பாறை மாவட்டத்தின் அடியோ நுனியோ தெரியாமல் வைத்தியசாலை நிர்வாகங்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை காரியாலய விவகாரங்கள் தொடர்பில் இனவாதமாக கருத்துக்களை தெரிவிப்போர் அதிலிருந்து இனி விடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :