கல்முனை பற்றிமாவில் 76மாணவர் பல்கலைக்கு தெரிவு! 8மாணவர் மருத்துவம்: 8மாணவர் பொறியியல் துறைக்கும்தெரிவுவி.ரி.சகாதேவராஜா-
கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் இம்முறை வெளியான க.பொ.த. உயர்தரப்பரீட்சைப்பெறுபேறுகளின் பிரகாரம் ,மொத்தமாக 76மாணவர்கள் சகலதுறைகளுக்கும் தெரிவாகவுள்ளதாக கல்லூரி அதிபர் வண.சகோ.எஸ்.சந்தியாகு அடிகளார் தெரிவித்தார்.
குறிப்பாக எட்டு மாணவர்கள் மருத்துவத்துறைக்கும், எட்டு மாணவர்கள் பொறியியல்துறைக்கும் தெரிவாகியுள்ளனர்.

உயிரியல்விஞ்ஞானத்துறையில் சத்தியநாதன் றக்ஷனா என்ற மாணவி 3ஏ சித்திபெற்று மாவட்டநிலையில் 17வது இடத்தைப்பெற்று மருத்துவத்துறைக்கு தெரிவாகவுள்ளார்.
அவரைத்தொடர்ந்து ரி.டிலக்ஷன்- 2ஏபி, ரி.யுவோபிகா -2ஏபி, ரி.அனுஷா-ஏ2பி, எஸ்.மிதுர்ஷன்-3ஏ, எஸ். சாஜகா -3ஏ, ஜே.நிலுக்சன் -ஏ2பி, வை.கோபிகா-ஏ2பி, ஆகிய சிறப்புச்சித்திகளைப்பெற்றுள்ளனர்.
இவர்களில் சங்கரப்பிள்ளை சாஜகா என்ற மாணவி பழையபாடத்திட்டத்தில் 3ஏ பெற்று மாவட்டத்தில் 3ஆம்நிலையிலுள்ளார்.

பௌதீகவிஞ்ஞானத்துறையில் என்.சதுர்சன் -2ஏபி சித்திபெற்று மாவட்டத்தில் 9ஆம் நிலையிலுள்ளார்.
அவரைத்தொடர்ந்து எஸ்.நந்தகோபன்-2ஏபி, எ.எஸ்.ஹூமயுன்ஷிமார்- ஏ 2பி ,ஆர்தர்ஷிலன்- 2ஏபி, ரி.வேணுசஜித்- ஏ2பி, எஸ்.திலுக்ஷன்- 2ஏசி, பி.பவன்-ஏ2பி, எஸ்.அனோல்ட் எரிக்ஷன்-ஏ2பி, ஆகியோர் பொறியியல்துறைக்கு தெரிவாவர்.

கல்லூரியில் உயிரியல்விஞ்ஞானதுறையில் 19மாணவர்களும், பௌதீகவிஞ்ஞானதுறையில் 21மாணவர்களும், வர்த்தகத்துறையில்12மாணவர்களும், தொழினுட்பத்துறையில் 09மாணவர்களும், கலைத்துறையில் 15மாணவர்களும், மொத்தமாக 76மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் வாய்ப்புள்ளது.

கல்லூரி அதிபர் வண.சகோ.எஸ்.சந்தியாகு அடிகளார் இத்தகவலைத்தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :