14 நாட்களுக்கு முழுமையாக நாட்டை முடக்க கோரிக்கை? ஷவேந்திர சில்வா பதில்



J.f.காமிலா பேகம்-
லங்கையில் இரண்டுவார முடக்க நிலையை அமுல்படுத்தும்படி அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசகராக பேராசிரியர் காமினி பீரிஸ் மற்றும் பேராசிரியர் மலிக் பீரிஸ் ஆகியோர் நீண்ட அறிக்கை ஒன்றை அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அதேபோல கொவிட் ஒழிப்பு இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேயும் நாட்டை முழுமையாக 2 வாரத்திற்கு மூடும்படி கூறியுள்ளார்.

தற்போது உள்ள நிலைமைக்கு மத்தியில் பயணத்தடை, அடையாள அட்டைப்படி அனுமதி என்பது கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வாக அமையாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் 14 நாட்களுக்கு நாட்டை முடக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என, ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.மேலும் சமூக ஊடகங்களில் பரவியுள்ள இவ்வாறான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :