இலங்கையில் அஸ்ட்ராசெனெகா கோவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் ஆறு பேருக்கு கடுமையான இரத்த உரைவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அவர்களில் மூன்று பேர் இறந்துள்ளனர் என்று இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வனியராச்சி நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் இரண்டாம் டோஸ் மே மாதம் முதல் வாரத்தில் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ReplyForward

0 comments :
Post a Comment