பைஷல் இஸ்மாயில் -
நாட்டில் மருத்துவத் தவரங்களை மிக அதிகமாக உருவாக்கும் நோக்கில் இன்று காலை (16) சுவ வேளை 6.40 மணியளவில் நாடளாவிய ரீதியில் மருத்துவத் தாவரங்களை நடவேண்டும் என சுதேச மருத்துவ அமைச்சினால் கோரியமைக்கு அமைவாக மருத்துவத் தாவரங்கள் நாட்டி வைக்கப்பட்டது.
திருகோணமலை முல்லிப்போத்தானை 9 வது கொலனி தங்கநகரில் அமைந்துள்ள ஆயுர்வேத நடமாடும் மருத்துவ நிலைய வளாகம் மற்றும் கந்தளாய் கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலை வளாகம் போன்ற இடங்களில் மருத்துவத் தாவரங்கள் நடப்பட்டது.
இந்நிகழ்வு வைத்தியர்களான போல் மோனச்சந்திரன் மற்றும் வைத்திய பொறுப்பதிகாரி பிரசாதி விஜேய சேகர ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு முல்லிப்போத்தானை தவிசாளர் சம்பிக்க பண்டார மற்றும் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி ஆர்.ஸ்ரீதர் உள்ளிட்ட வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர்கள் பங்கேற்று மரக் கன்றுகளை நட்டி வைத்தனர்.
0 comments :
Post a Comment