இக்கட்டுரைப் போட்டியில் இலங்கையின் நாலாபாகத்திலும் இருந்து மாணவர்கள் 14 வயது தொடக்கம் 19 வயது வரையுள்ள மாணவர்கள் மாத்திரம் போட்டியில் கட்டுரை எழுத வைக்கும் நோக்கில் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
போட்டியில் பெறுமதியான முக்கிய மூன்று பரிசில்களும் பத்து ஆறுதல் பரிசில்களும் மற்றும் 25 மேலதிகப் பரிசில்களும் வழங்கப்படுவதுடன் கட்டுரை எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் சிறப்புச் சான்றிதழும் வழங்கிவைக்கப்படவுள்ளன.
விதிகள்:
01. 14 வயது தொடக்கம் 19 வயது வரையான மாணவர்கள் மாத்திரம் கலந்து கொள்ளலாம்.
02. கட்டுரை எழுதி பரிசிலுக்குத் தெரிவான பின்னர் வெற்றியாளர் மாணவரல்ல என்று தெரிந்தால் பரிசில் நிறுத்தி வைக்கப்படும்.
03.கட்டுரைகள் மின்னஞ்சலில் அனுப்பி விட்டு தபாலில் அதிபர் அல்லது ஆசிரியர் ஒருவரின் உறுதிப்படுத்தலுடன் அனுப்புதல் கட்டாயம்.
04.தபாலில் வரும் கட்டுரைகளுக்கே பரிசில்களும் சான்றிதழும் வழங்கப்படும்.
05. கட்டுரை 500-600 சொல்|சொற்களில் அமைதல் வேண்டும். ஒருவர் ஒரு முறை மாத்திரம் கட்டுரை அனுப்பலாம்.
06. கட்டுரை போட்டியின் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
பரிசில்கள்:
01. முதலாம் பரிசு - 10,000.00
02. இரண்டாம் பரிசு- 7,500.00
03. மூன்றாம் பரிசு - 5,000.00
04. பத்து பேருக்கு தலா- 1,000.00
05. 25 பேருக்கு சுவர் கடிகாரங்கள்
அத்துடன் கட்டுரை எழுதும் அனைவருக்கும் இணையத்தள சிறப்புச் சான்றிதழ் போன்றன வழங்கப்படும்.
தலைப்பு:
கொரோனா வைரஸும் தற்கால சூழல் பாதுகாப்பும்.
importmirror
No:209
Small Mosque Road
Addalaichenai -10
PC-32350
கடுரை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்:Munas209@gmail.com

0 comments :
Post a Comment