கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் வித்தியாசமான முறையில் மாபெரும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு


எம்.என்.எம்.அப்ராஸ்-

டெங்கு நுளம்பு பரவலை கட்டுப்படுத்தும் முகமாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.ஆர்.எம்.அஸ்மி அவர்களின் வழிகாட்டலில் ,மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஏ.எம்.பாறுக் அவர்களின் நெறிப்படுத்தலில்
சுகாதாரப் பரிசோதகர் எம்.ஜுனைதினின் ஏற்பாட்டில் கல்முனை அல் -அஸ்ஹர் வித்தியாலயத்தில் மாபெரும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டமொன்று இடம்பெற்றது

மாணவர்களை தங்கள் வீட்டிலும் ,வீட்டுக்கு வெளியிலும் உள்ள டெங்கு நுளம்பு பெருகக் கூடிய பொருட்களை அதிகமாகக் கொண்டு வரும்மாணவர்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என ஊக்குவிக்கப்பதுடன் அதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் கடந்த ஒரு வாரமாக வழங்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று (24)
பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய அனைத்துக்
பொருட்ககளையும் கொண்டு வந்தனர்

இது தொடர்பில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் டெங்கு பரவும் முறைகள் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு இடம்பெற்றதுடன் பின்னர் கொண்டுவரப்பட்ட பொருட்கள் யாவும் கல்முனை மாநகர சபை திண்ம கழிவு அகற்றல் பிரிவு மூலம் அகற்றப்பட்டது.

இந் நிகழ்வில் ஊக்குவிக்கும் முகமாக மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கப்பட்டதுடன் கல்முனை அல்- அஸ்ஹர் வித்தியாலய அதிபர் ஏ.எச்.அலி அக்பர், அவர்களுக்கும் அங்கு கடமை புரியும் ஆசிரியர்கள் தனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர் .

மாணவர் மத்தியில் வித்தியாசமான முறையில் இவ் விழிப்புணர்வு செயல்திட்டம் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :