அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் வனராஜா பகுதியில் 05/03/2021 மதியம் 01 மணியளவிலௌ இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயமுற்று டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுகவீனமுற்ற ஒருவரை கொட்டலையிலிருந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு ஏற்றி வந்த அவசர அழைப்பு அம்புலன்ஸ் வண்டியின் பின்னால் வந்த முச்சக்கரவண்டி வனராஜா சந்தியில் திருப்ப முற்பட்ட போது பின்னால் வந்த மற்றுமொறு முச்சக்கரவண்டியில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட முச்சக்கரவண்டியில் பயணித்த இருவருமாக மூவர் காயமுற்று டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவசர சேவை அம்புலன்ஸ் வண்டியில் கொண்டு செல்லப்பட்ட குறித்த நோயாளரின் உறவினர்களே முச்சக்கரவண்டியில் பின் தொடர்ந்து சென்ற போது இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர் என அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment