மதச்சார்பற்ற, ஜனநாயக தேசமாக இந்தியாவை பாதுகாக்க- பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு !

தசார்பற்ற கட்சிகள், அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு !

05-மார்ச் / புது டெல்லி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், பாஜக உள்ளிட்ட மதவாத சக்திகளை அதிகாரத்திலிருந்து வெளியே வைத்திருக்கவும், மதச்சார்பற்ற, ஜனநாயக தேசமாக இந்தியாவை பாதுகாக்கவும் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகள், அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் அணீஸ் அகமது தெரிவித்திருப்பதாவது,

மத்தியிலும் பல மாநிலங்களிலும் உள்ள பாஜக அரசாங்கங்கள் நாட்டின் பொருளாதாரத்தை அழிப்பதில் முனைப்போடு உள்ளன. முக்கிய பிரச்சினைகளான விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை, மற்றும் குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் கடுமையான சட்டங்கள் போன்றவற்றை கவனிக்கவும் பதிலளிக்கவும் தவறிவிடுகிறார்கள்.

 மத வெறுப்பு பிரச்சாரத்தால் கண்மூடித்தனமாக மக்களை மத அடிப்படையில் பிரித்து வைக்கின்றனர். குடியுரிமை சட்ட போராட்டமும், விவசாயிகளின் போராட்டமும் மக்களை மௌனமாக்கி ஒடுக்குவதற்கு பாஜக அரசாங்கம் எந்த அளவிற்கும் செல்லும் என்பதற்கான தெளிவான எச்சரிக்கையாகும். இப்போது அவர்கள் அரசாங்கத்தை எதிர்க்கின்ற, மக்களின் ஜனநாயக உரிமைகளை ஆதரிக்கின்ற தனிநபர்களையும் அமைப்புகளையும் குறிவைக்கின்றனர். மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு குற்றவாளிகளைப் போல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பல மாநிலங்களில் பெரும்பான்மை வாக்குகள் மூலம் பாஜக அதிகாரத்தை பெறவில்லை. மதச்சார்பற்ற கட்சிகளிடையேயான ஒற்றுமையின்மையும், பல கட்சிகள் பாஜகவுடன் உருவாக்கியுள்ள கூட்டணியும் பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வர உதவியது. மேலும், பாஜகவின் அதே பிளவுபடுத்தும் மொழியை மதச்சார்பற்ற கட்சிகள் கடைப்பிடிப்பதும், மென்மையான இந்துத்துவ பெரும்பான்மைவாத அரசியலில் மதச்சார்பற்ற கட்சிகள் பயணிப்பதும் பாஜக அரசியலை தோற்கடிக்க முடியாமல் போனதற்கு காரணமாகும். பாஜகவுக்கு எதிரான உண்மையான எதிர்ப்பு என்பது, அவர்களின் வெறுப்பு மற்றும் மத துவேச அணிதிரட்டும் அரசியலை எதிர்ப்பதன் மூலமே இருக்க வேண்டும்.

மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள மக்களுக்கும், கட்சிகளுக்கும் தேசத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக தன்மையைக் காப்பாற்றுவதில் தங்கள் பங்கைச் செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பாகும். 

 எனவே தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் உள்ள அனைத்து மக்களும், கட்சிகளும், அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தேர்தல் முடிவுகளின் மூலம் தெளிவான எச்சரிக்கையை வழங்க வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக் கொள்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :