வீதிஅபிவிருத்தித்திணைக்களத்தில் பாரிய நிதி மோசடி! கணக்காளர் கைது: பிரதமபொறியியலாளரைத்தேடி வலைவீச்சு.



வி.ரி.சகாதேவராஜா-
கிழக்குமாகாண வீதிஅபிவிருத்தித்திணைக்களத்திற்குட்பட்ட மட்டக்களப்பு காரியாலயத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றமை குறித்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
முதற்கட்டமாக 25 லட்சருபா காசோலை மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2010-2014 வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற இம்மோசடி தொடர்பில் 2019 இல் திட்ட ஒப்பந்தகாரர்களுள் ஒருவரான வை.எம்.முஸம்மில் என்பவர் குறித்த 25 லட்சருபா காசோலை மோசடி தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றப் புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடு செய்திருந்தார்.

அவரது முறைப்பாட்டுக்கமைய கடந்த இரு வருடங்களாக விசேட குற்றப் புலனாய்வு பிரிவுப் பொலிசார் நடாத்திய தொடர் விசாரணை மற்றும் தேடுதலின் பலனாக இத்துணிகரமோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இந்த நிதிமோசடியில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின்பேரில் அங்கு கடமையாற்றிய கணக்காளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட கணக்காளரை நீதிமன்றில் ஆஜர்செய்தபோது எதிர்வரும் 25 ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (16) உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் ஜெய்க்கா திட்டத்தில் 24 இலட்சம் ரூபா மோசடி செய்தார் என்ற சந்தேகத்தின்பேரில் இவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு;ள்ளார்.

மேலும் அதனோடு தொடர்புடைய பிரதமபொறியியலாளரைத்தேடி பொலிசார் வலைவீசியுள்ளனர்.ஓரிரு நாட்களில் இதனுடன் சம்பந்தப்பட்ட மேலும் சிலர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மோசடியின் சதித்திட்டம் காரணமாக கிழக்குமாகாண பணிப்பாளர் வி.கருணைநாதன் தவறுதலாக தற்காலிக பணிமாற்றம் செய்யப்பட்டிருந்து பின் கிழக்குமாகாண பணிப்பாளர் மீளநியமனம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தமோசடி போல் இன்னும் பல மில்லியன்ருபா மோசடிகள் இடம்பெற்றிருக்கலாமென கூறப்படுகிறது.

இந்த மோசடி தொடர்பில் தெரியவருவதாவது:

ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா திட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்திக்காக 2010 தொடக்கம் 2014 வரையிலான நன்கொடையாக பெருந்தொகை நிதி வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் கணக்காளர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நியமிக்கப்பட்ட கணக்காளர் குறித்த காலப்பகுதியில் 24 இலட்சத்து 39 ஆயிரத்து 200 நூறு ருபா 85 சதம் (2439200.85) பணத்தை மோசடி செய்துள்ளதாக கடந்த 2019 ம் ஆண்டு இத்திட்டத்தின் ஓப்பந்தகாரரினால் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றப் புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து விசேட குற்றப் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் துசார பிரேமானந்த தலைமையிலான குற்றப் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நிதி மோசடி தொடர்பாக கணக்காளரை நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை (16) கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றின் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 25 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :