ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட இளைஞர்கள் சமூகத்துக்காக செயற்பட தயாராக உள்ளார்கள் அவர்களை தடுக்க வேண்டாம், மரங்களை பாதுகாத்தல், வன ஜீவராசிகளை பாதுகாத்தல் எனும் செயல் திட்டம் நேற்று இலங்கையில் பல பாகங்களில் காலை 10.30 மணிக்கு இடம் பெற்றது .
கெளரவ ஜனாதிபதி கோட்டாபய அவர்களின் செயல் திட்டமான ஆற்றங்கரைகளை சுத்தம் செய்வோம் எனும் செயல் திட்டத்தையும் கருத்தில் கொண்டு அட்டாளைச்சேனை கோணாவத்தை சுத்தம் செய்யப்பட்டு நிழல் தரக்கூடிய மரங்களும் நடப்பட்டது.
ஒன்று கூடுவோம் இலங்கையின் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான ஒருங்கினைப்பாளர்கள் நாசர் முஹம்மட் சப்னாஸ் மற்றும் றாசீக் முஹம்மட் றிசான் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு நிகழ்விற்கு ஒன்று கூடுவோம் இலங்கையின் கிழக்கு மாகாண ஒருங்கினைப்பாளர் ULM. சினான்,Wd வீரசிங்க அவர்களின் பிரதேச இணைப்பாளர் ஜெஸீல் ஆசிரியரும்,அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் சீத்,
பிரதேச சர்வமத சம்மேளனத்தின் உறுப்பினர் இக்ராம்,
, ஒன்று கூடுவோம் இலங்கையின் தன்னார்வ தொண்டர்களும் கலந்து சிறப்பித்தனர்.

0 comments :
Post a Comment